Wednesday, March 23, 2011

விரலின் நுனியில் (விரிந்திடும்) உலகம்....

முன்னொரு காலம்
உறவிற்குள்
முகம் பார்த்து பேச
காத்திருந்தோம் 
பல நாட்கள் !

 நல்லதோ, கேட்டதோ
செய்திகள் அனுப்பினால்
போய்ச் சேரும்
சிலநாட்கள் கழித்து !

இன்றோ ..............

விரிந்திடும் உலகத்தை
விரல் நுனியில் 
கொண்டு வந்தோம்
வலைதளத்தின் வடிவினிலே ........! 

 கற்காலம் தொட்டு இக்காலம்
வந்து கற்பனைக்கும் எட்டாத 
வருங்காலம் வரை இணைக்கின்ற
வலைதளமோ  இப்போது ..... !

ஊரென்ன, பெயரென்ன 
உருவமேதும் தெரியாமல்
நண்பர்களாய் பேசுகிறோம்
மணிக்கணக்கில்..... !

படிப்பு, நட்பு, செய்தி
என்ற பாகுபாடு இன்றி
அனைத்தும் அறிகிறோம் 
அமர்திருக்கும் அறையிலேயே......... !

உலகத்தின் எங்கோ
ஒரு மூலையில் 
உறவுகளைத்  தேடி
இனிக்கின்ற செய்தி பேசி
இதயங்களை பரிமாறி
இணைக்கின்றதொரு
அரிதான இணையதளம்...... !
   
 அன்புடன்
பாலா    
   
    

 

No comments:

Post a Comment