கடற்கரை காற்று
ஒரு கவளம் சோறு
என்னுயிர்த் தோழனோடு
இதை விட வேறு
என்ன வேண்டும் எனக்கு
நித்தமும் கூடினோம்
நடுநிசி என்றும் பாராமல்
சரியோ தவறோ
சத்தமாய் பேசினோம்
மனதில் பட்டதெல்லாம்
எவ்வித சலனமும்
இல்லாமலே
இப்படியே கூடினோம்
நாட்களும் பல காலம்
யார் கண்கள் பட்டதோ
எங்கள் நட்பின் மீது
மாறி மாறி அவரவராய்
பார்க்க கூட காத்திருந்தோம்
சில காலம் ! பிரிவு என்னும்
சொல் கூட இல்லை
என்றோம் எங்களுக்குள்
அவனோ இருக்க இடம் தேடி
ஓடினான் சில காலம்
ஆம் கிடைத்தது பார்
யோகம் போல நண்பர்
கூட்டம் ஒன்று
திசை மாறி எனை மறந்து
சென்றான் அவனே !
எனைத்தேடி அவன் அலைந்தான்
முன்னொரு காலம் !
ஆனால் இன்றளவில் எனைப்
பார்க்க நேரமில்லை அவனுக்கு !
நினைக்க தான் தோன்றவில்லை
அவன் மனதிற்கும் கூட !
அவன் என்று பேசினேன்
ஆரம்பம் முதலே ! இனி
அவ்வாறு அழைத்தால்
மரியதை இல்லையெனத்
தோன்றியதெனக்கு ! அவகாசம்
கேட்டேன், அவரோடு பேச !
செல் ஒன்று வைத்துள்ளார்
அவர் ! சில முறை அல்ல !
செய்திகள் அனுப்பினேன் !
பல தடவை அவரோடு பேச !
அவர் நினைவைத்
தட்டவில்லை அவையெதுவுமே !
நேரில் பார்த்தபோது
வணங்கினார் மரியாதை
நிமித்தமாக ! எனை
கடந்தவுடன் எனை மறந்தான்
என் உயிர்த்தோழன் !
வழி கேட்டான்,
வழிகளும் சொன்னேன்
அவன் கேட்ட போது
இருவர் செல்ல
வழி சொன்னான்
அவனும் கூட .....
புறப்பட்டோம் இருவருமே
வெகுதூர பயணமாக சில காலம் !
பாதியிலே அவர் மட்டும்
தனித்தோட ! முடியாமல்
திரும்பி விட்டேன்
நான் மட்டும் தனியாக !
இன்றிரவு ...............
மீண்டும் அதே கடற்கரை
அதே ஒருகவள சோறு
உண்ண மனம் இன்றி நான் மட்டும்
இருக்கின்றேன் தனியாக .............
அன்புடன்
bala
No comments:
Post a Comment