பூக்களின் புன்னகை விழா (13/02/2011)
காற்றலைகளில் மிதப்பது போல்
சந்தித்த நீங்கள்
அப்போது தோன்றவில்லை
உங்களிடத்தில் எதுவுமே
சில நொடிகள் கூட
செல்ல வில்லை அதுவுமே
சிறிதான ஆசை
சிறப்பாக சொன்னார்
சிரிக்கின்ற முகத்தோடு
பூ போன்ற மலருக்கும்
பிடித்ததும் அதுதான்
குழலூதும் கண்ணனையும்
பிடிக்குமென பதில் கூற
இருவருமாய் சேர்ந்து
தனித்தனியே நின்று
பெற்றோரிடம் கேட்க
சம்மதமென சான்றோரும்
செவி சாய்த்துக்கொள்ள
மணக்கின்ற பூவும்,
இணைக்கின்ற நாரும்
நாள் பார்த்து நின்றது
பூங்கொத்து போல
காதலர் தினம் கொண்டாட
இது காதலும் அல்ல
பெற்றோரும், உற்றோரும்
இவர்கள் உறுதி கண்டு
சேர்த்தும் வைத்தனர்
அதற்கு முந்தைய நாளே
ஆன்றோரும், சான்றோரும்
வாழ்த்துக்கள் பல கூற
சந்தோஷ வானில்
என் தோழி சிறகடிக்க
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
பல கோடி நான் சொல்வேன் .
அன்புடன்
பாலா
No comments:
Post a Comment