முன்னொரு காலம்
உறவிற்குள்
முகம் பார்த்து பேச
காத்திருந்தோம்
பல நாட்கள் !
நல்லதோ, கேட்டதோ
செய்திகள் அனுப்பினால்
போய்ச் சேரும்
சிலநாட்கள் கழித்து !
இன்றோ ..............
விரிந்திடும் உலகத்தை
விரல் நுனியில்
கொண்டு வந்தோம்
வலைதளத்தின் வடிவினிலே ........!
கற்காலம் தொட்டு இக்காலம்
வந்து கற்பனைக்கும் எட்டாத
வருங்காலம் வரை இணைக்கின்ற
வலைதளமோ இப்போது ..... !
ஊரென்ன, பெயரென்ன
உருவமேதும் தெரியாமல்
நண்பர்களாய் பேசுகிறோம்
மணிக்கணக்கில்..... !
படிப்பு, நட்பு, செய்தி
என்ற பாகுபாடு இன்றி
அனைத்தும் அறிகிறோம்
அமர்திருக்கும் அறையிலேயே......... !
உலகத்தின் எங்கோ
ஒரு மூலையில்
உறவுகளைத் தேடி
இனிக்கின்ற செய்தி பேசி
இதயங்களை பரிமாறி
இணைக்கின்றதொரு
அரிதான இணையதளம்...... !
அன்புடன்
பாலா