Thursday, July 4, 2013

மலரும் மாதங்கள்

புத்தாண்டு தினத்தில்
புது யுகம்  படைப்போம்
என்றோம் ஜனவரியில்...
காதலர்கள் சேர்ந்து
காவியம் படைத்தது
பிப்ரவரியில் ....
தேர்வுகள் எழுதி
சாதனைகள்
பல படைத்தோம்
மார்ச் மாதத்தில் ...
அக்னி வெயில்
என்றும் பாராமல்
ஊர் சுற்றினோம்
ஏப்ரல் மாதத்தில்...
உழைத்தோர்க்கு
நன்றி சொல்கிறோம்
மே மாதம்....
கோடி கனவுடன்
பள்ளி செல்வோம்
ஜூன் மாதத்தில் ....
புயலடிக்கும்
வேகத்தில்
காத்தடிக்கும்
ஜூலை மாதத்தில் ....
சுதந்திர காற்றுக்கு
வணக்கம் சொல்கிறோம்
ஆகஸ்ட் மாதத்தில் ...
கடவுலுக்கு பூஜை
செய்து புதுமைகள்
செய்வோம்
செப்டம்பர் மாதத்திலே....
நரகாசுரன் 
அழிந்தான் என்று
கொண்டாடினோம் தீபாவளியை
அக்டோபர் மாதத்திலே....
தீப ஒளி ஏற்றி
கார்த்திகை என்றோம்
நவம்பர் மாதத்திலே....
தொல்லைகள் தொலையட்டும்
தீமைகள் ஒழியட்டும்
நன்மைகள் பெருகட்டும்
இனி என்றோம்
டிசம்பர் மாதத்திலே....
மீண்டும் சிந்திப்போம் ... அடுத்த வருடம்  ....

காலை மெரினா

கடற்கரை சாலை
காலை 8 மணி

சில்லென்ற நீருடன்
ஆதவனும் மேலெழும்ப
சிலிர்க்கின்ற வேகத்தில்
மீன்களும் துள்ளியோட
வலை வீச வந்தனர்
மீனவர் கூட்டம் ...
ஓர சாலையிலே
காலை வேளையிலே
உடல் குறைக்க
தினம்  ஓடி
அங்கமெல்லாம்
வியர்வையாகி ...
களைப்பற
படிக்கட்டில்
ஒரு சிலரும்
அமர்ந்திருக்க....
மணி தெரியா
அவசரமாய்
அவரவர்
அலுவலகம்
நோக்கி நடை போட ...

அரை குறையாய்
உணவுண்டு
பள்ளி செல்லும்
மாணவர்கள்
வேகமாக நடை போட ...
சிறு கடைகள்
ஆங்காங்கே
விண்மீனாய்
சில திறக்க...
காதலர்கள்
விடை கொடுத்து
அவர்களும்
பிரிந்து செல்ல ...
இரவுப்பணி
தினம் முடித்து
வீடு செல்லும்
காலையிலே
நான் காணும்
கடலோர காட்சி இவை....

நினைவுகள்

தேடுகிறேன்
தொலைந்து போன
என் பள்ளித் தோழர்களை
நினைவினில் வரவழைத்து  .......

தூசி தட்டி
தேடினேன்
என் டைரிகளின்
ஆயிரமாயிரம்
பக்கங்களை  ....
முகவரியாவது
கிடைக்குமென்று

கிடைத்தது
அவர்கள்  கொடுத்த
மயிலிறகு மட்டும்
அதன்
சிறுசிறு தோகை
இழைகளாய் ....